தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது!

மார்ச் 10, 2019 242

சென்னை (10 மார்ச் 2019): தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் மலத்தின் வழியாக பரவும் ஒருவகை தொற்றுநோய். இதனால் தசைநார் பலவீனம் அடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த நோயை குணப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இருப்பினும் அதனை வராமல் தடுக்கலாம். அதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டதன் மூலம், இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து, தடுப்பு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து நடைபெறுகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் அளிக்க வேண்டும்.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...