காடுவெட்டி குருவின் மரணத்தில் சந்தேகம் - பகீர் கிளப்பும் அவரது மகன்!

மார்ச் 10, 2019 361

சென்னை (10 மார்ச் 2019): காட்வெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல என்று அவரது மகன் கனலரசன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி குருவின் மகன் கனலசரசன், குருவின் சகோதரி மீனாட்சி , மற்றும் அவரின் தாய் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாக பாமகவினர் கருதினர். குருவை சூழ்நிலைக் கைதியாக வைத்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து பேசுமாறு காடுவெட்டி குருவை தூண்டிவிட்டி பாமகவின் அரசியல் ஆதாயத்திற்காக அவரை பழிகடாவாக்கிவிட்டனர். ஆனால் பாமகவினர் விசிகவிடமிருந்து பிறந்த நாள் விழாவிற்கு வாழ்த்துக்களும் பூங்கொத்தும் பெற்றுள்ளனர்.

குருவுக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அன்புமணி ராமதாஸுன் வளர்ச்சிக்கு குரு தடையாக இருக்கக்கூடாது என்று தான் அவர் இறந்து விடுவார்! மேல் சிகிசை தேவையில்லை என் அன்புமணி ராமதாஸ் குருவின் குடும்பத்தாரான எங்களிடம் கூறியுள்ளார்.

பிற கட்சிகளை ஏசுமாறு குருவைத் தூண்டிவிட்டு அதன் மூலமாய் பாமக தலைமை அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டது.

மேலும் குருவின் மரணம் இயற்கையானது அல்ல. இதற்கு வன்னிய சமுதாயம் பாமக தலைமைக்கு உரிய பதிலைச் சொல்லும். குருவுக்கு அளிக்கப்ப்பட்ட சிகிச்சைகள் அதிகதிகமாக சந்தேகத்தைக் கிளப்புகின்றன.

எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் பாமகவினரால் அச்சுறுத்தல் உள்ளது. அதனால் எங்களுக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். இவ்வாறு குருவின் குடும்பத்தினர் கூட்டாக பேட்டி அளித்ததனர். இதனால் பாமக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...