தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்!

மார்ச் 10, 2019 221

இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ந் தேதி தொடங்கி மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மே 23ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...