தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு!

மார்ச் 10, 2019 293

சென்னை (10 மார்ச் 2019): நாடாளுமன்றாத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வியாழக்கிழமையன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் ஏப்ரல் 18-ம் தேதியே தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய மார்ச் 26-ம் தேதி இறுதி நாளாகும். வேட்பு மனுக்களின் பரிசீலனை மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...