விஜய்காந்த் கூட்டணி அமைத்ததும் ஹெச் ராஜா என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

மார்ச் 11, 2019 498

சென்னை (11 மார்ச் 2019): தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை அடுத்து ஹெச் ராஜா பதிவொன்றை இட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் இட்டுள்ள பதிவில், "வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அ.இ.அ.தி.மு.க-வுடன் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. அன்று NDA வை விட தி.மு.க விற்கு வெறும் 2% வாக்குகளே அதிகம் என்பது உலகறிந்த விஷயம். எனவே தி.மு.க + காங்கிரஸ் 4%, மக்கள் நல கூட்டணி 2% அவ்வளவு தான். கடுமையாக உழைப்போம் 40 ம் நமதே”, என்று பதிவிட்டுள்ளார்.

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...