பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரத்தில் திமுக பிரமுகருக்கும் தொடர்பா?

மார்ச் 12, 2019 449

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் 200 க்கும் அதிகாமான இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளம் பெண் ஒருவர் கொடுத்த புகார் தமிழகத்தில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள் சிலர் தனக்கு பாலியல்துன்புறுத்தல்கள் அளிப்பதாக அந்தப்பெண் கொடுத்த புகாரில் சில இளைஞர்களைக் கைது செய்தனர். இளைஞர்களுடன் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களிடமிருந்து பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்ற தகவல் வெளியானது. பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ``தமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது” என்றார். ஆளுங்கட்சியினரைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

பொய்யான தவறான செய்திகளைச் சமூகவலைதளத்தில் பரப்பக்கூடாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளோம். சி.பி.ஐ விசாரணை வைத்தாலும் சரி இண்டர்போல் விசாரணை வைத்தாலும் சரி எங்களுக்குக் கவலை இல்லை. தி.மு.க மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் மகனுக்கு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள முதல் குற்றவாளிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. நீண்டகாலமாக அவர்களுக்குள் நட்பு உள்ளது. இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை விசாரித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எந்த விசாரணை வேண்டுமானாலும் நடத்தலாம். இந்த விவகாரத்தில் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கிறேன். இது தி.மு.க-வின் பொய்ப் பிரசாரம். இதில் தி.மு.க-வுக்குதான் முழுத்தொடர்பு இருக்கிறது. அந்தக் குற்றவாளி என்னை தளபதி ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. மேலும், இதுதொடர்பாக பத்திரிகைகளுக்கு நான் அளித்த பேட்டிகளையும் உங்களுக்கு அளிக்கிறேன். அந்த ஆடியோ பதிவையும் அளிக்கிறேன். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம்” என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...