பொள்ளாச்சி மாணவிகளை கொச்சைப் படுத்திய ஊடகம்!

மார்ச் 12, 2019 663

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சியில் 200 க்கும் அதிகமான மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சில ஊடகங்கள் அருவருக்கத் தக்க வகையில் செய்தி வெளியிடுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் 200 க்கும் அதிகாமான இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளம் பெண் ஒருவர் கொடுத்த புகார் தமிழகத்தில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள் சிலர் தனக்கு பாலியல்துன்புறுத்தல்கள் அளிப்பதாக அந்தப்பெண் கொடுத்த புகாரில் சில இளைஞர்களைக் கைது செய்தனர். இளைஞர்களுடன் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களிடமிருந்து பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆளுங்கட்சியின் தலையீடும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்ட மாலைமலர் பத்திரிகை பாதிக்கப் பட்ட மாணவிகளை கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...