டிடிவி தினகரன் கட்சிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!

மார்ச் 12, 2019 424

சென்னை (12 மார்ச் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து செயற்குழு முடிவு செய்துள்ளது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ஆலந்தூரில் (12.03.19)நடைபெற்றது.இதில் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமை தாங்கினார்.மாநில,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பல்வேறு அமைப்பு சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.இறுதியாக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 18 தொகுதிக்கான சட்டசபை தேர்தலில் யாருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன.செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை ஆழமாகவும்,ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தனர்.

இறுதியாக டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரிப்பது என்றும்,அதனின் வெற்றிக்காக தமிழகம் எங்கும் களப்பணியாற்றுவது என்றும்,மாநில,மாவட்ட,கிளை நிர்வாகிகள் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு இஸ்லாமிய மக்களின் வாக்குகளை முழுமையாக பெறுவதும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...