திமுக ஏமாற்றி விட்டதா? - ஜவாஹிருல்லா பதில்!

மார்ச் 13, 2019 610

சென்னை (13 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தலில் தொகுதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜவாஹிருல்லாவிடம், திமுக கூட்டணியில் தொகுதி அளிக்காத நிலையிலும் ஆதரவு அளிப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜவாஹிருல்லா, "மமகவுக்கு ஒரு கொள்கை உண்டு அதன் அடிப்படையிலேயே திமுகவுக்கு ஆதரவளிக்கிறோம். இப்போதைய சூழ்நிலையில் பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் என்பதால் திமுக கூட்டணியை ஆதரிப்பதே சரியானது." என்றார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் எங்களிடம் தனிப்பட்ட முறையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்று சில வாக்குறுதிகள் அளித்துள்ளார். அதனை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். சீட் கிடைக்கவில்லை என்பதற்காக இன்னொரு கட்சியில் தாவுவதற்கு நாங்கள் கொள்கை அற்றவர்கள் அல்ல என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் மமகவிற்கு தொகுதி ஒதுக்காதற்கு காரணம் திமுகவைத்தான் கேட்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...