என்னை சார் என்று அழைக்க வேண்டாம் - வைரலாகும் ராகுல்காந்தி கல்லூரி மாணவிகள் உரையாடல்!

மார்ச் 13, 2019 337

சென்னை (13 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் குறிப்பாக ஒரு மாணவி ராகுல் சார் என்று அழைக்க, அதற்கு ராகுல் காந்தி, என்னை ராகுல் என்றே அழைக்கலாம் என்றதும் மாணவிகள் ஆராவாரம் செய்து அவரது அணுகுமுறையை வரவேற்றனர்.

இதற்கிடையே ராகுல் காந்தியுடன் உரையாடல் முடிந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவிகள், ‘ராகுல் காந்தியுடனா கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது. அருடைய பேச்சு உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது. அவர் அழகாக இருந்தார். அவருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெளிவாகியுள்ளது’ என்று தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...