பொள்ளாச்சி விவகாரத்தில் இன்னொரு பெண் பகீர் புகார்!

மார்ச் 14, 2019 592

பொள்ளாச்சி (13 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பெண் குற்றவாளி மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் மூன்று வருடமாக அவனை காதலித்தேன், ஆனால் ஆனால் அவன் என்னை ஆசை வார்த்தை காட்டி என்னை பலவந்தப் படுத்தி போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டினான்.

மேலும் அதனை சமூக வலைதளங்களில் போட்டு அவமானப் படுத்துவேன் என்றான். அப்போதுதான் அவனால் பல பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறித்து அவனால் பாதிக்கப் பட்டவர்கள் என்னிடம் கூறினர். அவன் மீது புகார் அளிக்கலாம் என்று அவர்கள் கூறினார்கள் ஆனால் என் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என்று பயந்து நான் புகார் அளிக்க செல்லவில்லை.

ஆனால் இப்போது வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதால் போலீசில் புகார் அளித்துள்ளேன் ஆனால் என் புகாருக்கு இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை முதல் போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...