கல்லூரி மாணவிகளிடம் ராகுல் மோடி குறித்து பேசியதற்கு தமிழிசை கண்டனம்!

மார்ச் 14, 2019 429

சென்னை (14 மார்ச் 2019): கல்லூரி மாணவிகளிடம் மோடி மீது தவறான கருத்துக்களை ராகுல் காந்தி பரப்பி வருகிறார் என்று தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். தன்னை ராகுல் என்றே அழைக்கலாம் என்றும், தன்னிடம் எந்தவித கடினமான கேள்விகளையும் கேட்கலாம் என்றும் கூறிய ராகுல், மாணவிகளின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதுமட்டுமின்றி இதுபோன்று 3000 பேர் மத்தியில் நின்று எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பிரதமர் மோடியால் கூற முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்தார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசிய இந்த உரையாடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை ராகுல் பரப்புவதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல்காந்தி தவறாக சித்தரிப்பதாகவும், கல்லூரியை எதிர்களமாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...