பொள்ளாச்சி பாலியல் சம்பவம் - ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு பதிவு!

மார்ச் 14, 2019 386

சென்னை (14 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டதாக வெளியான வீடியோவை அடுத்து இவ்விவகாரம் கடும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாலியல் சமபவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பதிவுகள் வெளியாவதாகவும் இதன் பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சப்ரீசன் இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சப்ரீசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...