யார் இந்த நவாஸ் கனி? - ராமநாதபுரம் மு.லீக் வேட்பாளர் குறித்த முழு தகவல்!

மார்ச் 15, 2019 911

சென்னை (15 மார்ச் 2019): ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி இ.யூ முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுவார் என்று கட்சித் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

வே கா. நவாஸ்கனி பற்றி வாழ்க்கை குறிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 14.05.1979 மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்ப படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.

20.01.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற """"தி டைம்ஸ் ஆப் லீக்"" என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகின்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது போது சென்னையிலிருந்து ஊருக்கு செல்ல வாகனம் இல்லாமல் கஷ்டப்பட்டதை கருத்தில் கொண்டு 1998ஆம் ஆண்டு எஸ்.டி. டிராவல்ஸ் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் மூலம்  வெளிநாடுகளில் பணிபுரியும் பல்லாயிரம் சாதாரண தொழிலாளிகள் ஊர் செல்வதற்கு குறைந்த கட்டணத்தில் பயன்பெற்று வருகின்றனர். அதே போன்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய அரசால் வழங்கப்படும் சலுகைகளை முறையாக பயன்படுத்தி தங்கள் இல்லங்களுக்கு பொருட்களை பாதுகாப்போடு அனுப்பிட எஸ்.டி. கார்கோ நிறுவனம் 2000ஆம் ஆண்டு முதல் சிறப்புயர் செயலாற்றி வருகின்றது. அதே போலவே எஸ்.டி. கார்கோ பிரைவேட் லிமிடெட், பிரான்ஞ் எக்ஸ்பிரஸ் நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்கள் பல்லாண்டு காலமாக செயல்பட்டு பல்லாயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

சேவைகள்

எஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வறக்கட்டளையின் மூலமாக பலநூறு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை சேர்ந்தவர்கள் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலை இலவசமாக ஒரு மாத காலத்திற்கு வழங்கி அனைத்து நிலைகளிலும் உதவி புரிந்தனர். இதன் மூலம் பல்லாயிரம் மக்கள் பயனடைந்தனர்.

அதே போன்று கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சுமார் 6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் எஸ்.டி. கூரியர்ஸ் மூலமாக இலவசமாக கேரளாவுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. கஜா புயலால் டெல்டா மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளான போது எஸ்.டி. கூரியர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சேர்க்கப்பட்டதோடு தன்னார்வ தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கா. நவாஸ்கனி சொந்த ஊரில் குருவாடி பைத்துல்மால் சேவை மூலம் வட்டியில்லா அழகிய கடனுதவி, நலிவடைந்தவர்களுக்கு பொருளாதார உதவி, நோய்வாய் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி என இறை பொருத்தத்திற்குரிய பணிகளை செய்து வருகின்றார்.

நல்லிணக்கப் பணிகள்

வருடந்தோறும் எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனத்தின் சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் மார்க்க அறிஞர்கள், சமுதாய அமைப்பினர், பத்திரிகையாளர்களை அழைத்து சமூக நல்லிணக்க இஃப்தாரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி நடத்துவதிலும், முஸ்லிம் லீகின் வழிகாட்டுதலோடு வருடந்தோறும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் மீலாதுந் நபி விழாக்களை பல் சமயத்தவர்களையும் அழைத்து நல்லிணக்க விழாவாக நடத்துவதில் பேரார்வம் கொண்டவர் கா. நவாஸ்கனி.

தமிழகத்தை தலைமையிடமாக உழைப்பையே மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று இறையருளால் 1946 கிளைகளையும், 350 இணைப்பு மையங்களோடு விரிவடைந்து இந்நிறுவனத்தின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 13,000 (பதிமூன்றாயிரம்) துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் கிளைகளை விரிவுபடுத்தி சாதனை படைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றது.

நவாஸ் கனி Academy of Universal Global Peace பல்கலைக் கழகம் கே. நவாஸ்கனிக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...