ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லையா? - முஸ்லிம் வாக்காளர்கள் ஆதங்கம்!

மார்ச் 17, 2019 792

சென்னை (17 மார்ச் 2019): திமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்பது திமுக முஸ்லிம் வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முஸ்லிம்களின் நண்பன் என்று பலமுறை கூறப்பட்டு வந்த போதிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

ஏற்கனவே மமக நம்மை விட்டு வேறு எங்கும் போக முடியாது என்பதால் அவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்து வந்த போதும் மமகவின் ஆதரவு திமுகவுக்கே என அறிவித்து விட்டனர்.

எனினும் திமுக வேட்பாளர் பட்டியலிலாவது முஸ்லிம் பெயர் இடம் பெறும் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் பெயர் கூட இல்லாதது முஸ்லி வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...