பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிந்தவன் கைது!

மார்ச் 18, 2019 581

நாகர்கோவில் (18 மார்ச் 2019): பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆட்டோ ஒட்டுநரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மயிலோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஹால் டிக்கெட் வாங்குவதற்காக, பள்ளிக்கு கடந்த திங்கள் அன்று சென்றுள்ளார். ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மாணவி பள்ளிக்கு வரவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனிடையே அன்று மாலை அழுதபடியே வீட்டுக்கு திரும்பிய மாணவி, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுநர், மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், மாணவியின் ஆபாச படத்தையும், சரவணன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான, ஓட்டுநர் சரவணனை தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் கொட்டாரகரை பகுதியில் வைத்து கைது செய்தனர். சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...