பாமகவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

மார்ச் 19, 2019 556

சென்னை (19 மார்ச் 2019): நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாமகவை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.

ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான இந்த கட்சி தற்போது போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் திமுகவை எதிர்கொள்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மோதுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை பாமக எதிர்கொள்கிறது. 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் திமுகவிடம் 5 தொகுதிகளையும், ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகளிடமும் பாமக இழந்தது. தற்போது இதே நிலை மீண்டும் திரும்பியுள்ளது. போதாதற்கு திமுக கூட்டணி வலுவாகவும் உள்ள நிலையில் பாமகவின் நிலை பரிதாபத்திற்குரியது.


தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...