கனிமொழிக்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

மார்ச் 21, 2019 425

தூத்துக்குடி (21 மார்ச் 2019): தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள அதேவேளை காமெடிக்கும் பஞ்சமில்லை அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது என்பது தெரிந்ததே. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக சின்னச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டதுடன் தூத்துகுடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் வாக்கு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஒரு இடத்தில் மட்டும் அவர் வாய்தவறி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார். பின் உடனே சுதாரித்து கொண்டு பாரத பிரதமரின் ஆசி பெற்ற தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்றார். ஒரு அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு வாய்தவறி வாக்கு கேட்ட சம்பவம் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே பாஜக பிரமுகர் ஒருவர் பாமக போட்டியிடும் தொகுதியில் பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...