விட்டுக் கொடுக்காத ஸ்டாலின் - இறங்கி வந்த வைகோ!

மார்ச் 25, 2019 356

சென்னை (25 மார்ச் 2019): தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்துள்ளதால், அக்கட்சியின் சின்னமான பம்பரம் அவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதோ ஒரு சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்புதான், நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குகிறது. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிரமம் என்பதால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என விடுதலை சிறுத்தைகள், மதிமுகவை கேட்டுக் கொண்டோம். விசிகதலைவர் என்பதால் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மற்றொரு வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு மதிமுகவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில், வைகோ தனதுமுடிவில் மாற்றம் செய்து கொண்டதை அடுத்து, கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

 

Mdmk contest in Udaya suriyan 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...