திமுகவுக்கு கமல் ஹாசன் பாராட்டு!

மார்ச் 25, 2019 507

ஆலந்தூர் (25 மார்ச் 2019): திமுகவிலிருந்து ராதாரவி நீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவுக்கு கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்?

பதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.

ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்?

பதில்:- இந்த பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்தித்து திரும்பிய பின்னர் காரணத்தை சொல்கிறேன்.

கேள்வி:- நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே?

பதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.

பதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.

தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

kamal appreciate dmk  

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...