பிரச்சாரத்தில் அரிவாளை தூக்கிக் கொண்டு நின்ற மன்சூர் அலிகான்!

மார்ச் 26, 2019 456

திண்டுக்கல் (26 மார்ச் 2019): திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மக்களோடு மக்களாக அவர்களது வேலைகளையும் செய்து அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. நாம்தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் விவசாயிகளின் வியாபாரப் பொருட்களை அவர்களுடன் இருந்தே வியாபாரம் செய்தது அசத்தினார்

மேலும் குப்பை அள்ளும் தொழிலாளிகளுடன் சாலிகளை கூட்டி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளி அசத்தினார். மன்சூர் அலிகானின் இந்த வித்தியாசமான பிரச்சாரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...