ஆரம்பமே சொதப்பல் - ஒரு தொகுதியை இழந்த கமல் கட்சி!

மார்ச் 26, 2019 421

பெரம்பலூர் (26 மார்ச் 2019): வேட்பாளரின் கவன்க்குறைவால் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 40 வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுவதாக உணர்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் அனைவரும் மதியத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதியில் செந்தில் குமாரின் மனுவை ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இன்று 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் 3.20க்கு செந்தில்குமார் தாமதமாக வந்ததால் அவரது மனுவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் மக்கள் நீதி மய்யம் அந்த தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...