தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

மார்ச் 28, 2019 328

கள்ளக்குரிச்சி (28 மார்ச் 2019): கள்ளக்குரிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143,341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...