இல்லாத சின்னத்திற்கு வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் - அதிர்ந்த பாமகவினர்!

மார்ச் 30, 2019 348

திண்டுக்கல் (30 மார்ச் 2019): பாமகவின் சின்னமான மாம்ழத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட காமெடி சாணர்பட்டியில் அரங்கேறியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமகவுக்கு ஆதரவு கேட்டு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் பேசினார்.

அப்போது பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு கேட்பதற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பேசினார். பின்பு அங்கிருந்தவர்கள் திருத்தி கூறிய பின்பு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டினார்.

இதனை மேடையில் இருந்த டாக்டர் ராமதாஸ் பார்த்து சிரித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...