தனக்குத் தானே குழி பறித்துக் கொள்ளும் திமுக!

மார்ச் 30, 2019 1074

சென்னை (30 மார்ச் 2019): திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்துவதற்கு திமுகவினர் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவது கண்கூடாக தெரிகிறது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதியை அரசியல் வாரிசாக்கும் முயற்சியே இது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் கட்சிக்காக பாடுபட்ட பல தொண்டர்கள் நிர்வாகிகள் இருக்க உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடிமட்ட தொண்டனாக இருந்து உயர்ந்த ஸ்டாலினே குடும்ப வாரிசு என்ற விமர்சனத்திலிருந்து திமுக தொண்டர்களே விமர்சித்து வரும் நிலையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மேலும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...