அதிமுகவினர் டிடிவி தினகரனுடன் ரகசிய கூட்டணி?

மார்ச் 31, 2019 494

கடலூர் (31 மார்ச் 2019): அதிமுக நிர்வாகிகள் பலர் டிடிவி தினகரனுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவில் உள்ளவர்கள் சிலர் தினகரன் அணிக்குத் தாவும் நிகழ்ச்சியும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சமூக வலைதளமான புலனம் எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

பண்ருட்டி நகர அதிமுக நிர்வாகி ஒருவருடன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகி உக்கிரவேல் என்பவர் பேசுவதாக குரல் ஒன்று பதிவாகியுள்ளது. அதில் கடலூர் மாவட்ட அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த முத்துக்குமார் என்பவர் 3 தினங்களுக்கு முன் அமமுகவில் இணைந்ததாகவும், அதற்கு பண்ருட்டி நகர அதிமுக பிரமுகர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு உக்கிரவேல் நன்றி தெரிவிக்கும் வகையில் உரையாடல் பதிவாகியுள்ளது. இது நேற்று கடலூர் மாவட்ட அதிமுகவினர் அடங்கிய வாட்ஸ் அ ப் குழுக்களில் வேகமாக பகிரப்பட்டது.

ஆனால் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...