நடிகைகளை மட்டுமே மோடி சந்திப்பார் - ஸ்டாலின் விளாசல்!

மார்ச் 31, 2019 268

ஆண்டிப்பட்டி (31 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை, ஆனால் நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காகத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் ஆண்டிபட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ‘டெல்லியில் தமிழக விவசாயிகள் சென்று போராட்டம் நடத்தியபோது மோடி அவர்களைப் பார்க்கவில்லை. ஆனால் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் என்றால் உடனடியாக அழைத்துப்பார்க்கிறார். கேவலம் நடிகைகளையும் அழைத்துப் பேசிவருகிறார்’ எனப் பேசியுள்ளார்.

ஸ்டாலின் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...