நடிகனுக்கு கூட்டம் சேர்ந்ததெல்லாம் அந்தக் காலம் - கமலுக்கே ஆப்பு!

மார்ச் 31, 2019 590

ஸ்ரீ பெரும்புதூர் (31 மார்ச் 2019): ஸ்ரீபெரும் புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் ஹாசன் கூட்டம் இல்லாததால் அதிர்ச்சியில் சென்னைக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும் புதூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடத்த ஏற்பட்டிருந்தது. ஆனால் அப்பிரசாரத்தில் போதுமான மக்கள் கூட்டம் இல்லை இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் சென்னைக்கே திரும்பிச் சென்றுள்ளார்.

இதேபோல படப்பையிலும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகரம் பகுதிக்கு வந்தார் ஆனால் அங்கும் மக்கள் இல்லை. இதனால் கடும் அப்செட்டில் உள்ளாராம் கமல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...