முதல்வர் எடப்பாடி மீது செருப்பு வீச்சு - மர்ம நபருக்கு வலை வீச்சு!

ஏப்ரல் 01, 2019 608

தஞ்சாவூர் (01 ஏப் 2019): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி மீது மர்ம நபர் செருப்பு வீசியுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக செருப்பு வீச்சிலிருந்து தப்பினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும், ஓ.பி.எஸ். ஒரு பக்கமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இரவு 9 மணிக்கு ஒரத்தநாட்டில் த.மா.கா. வேட்பாளர் என் ஆர். நடராசனுக்கு வாக்கு சேகரித்து பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து பறந்த ஒரு செருப்பு எடப்பாடியின் கான்வாய் மீது விழுந்து கிடந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...