வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஸ்டெர்லைட், , தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை பிரச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி, தொகுதி மக்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை #AskKanimozhi என்ற ஹேஷ்டேக்கில் கேட்கலாம். இதில் தமிழிசை பற்றி தங்களது கருத்து என்ன என ஒருவர் கேட்ட கேள்விக்கு கனிமொழி பதிலளித்துள்ளார். அதில் ‘ தமிழிசை அவர்கள் தமிழக பாஜகவின் தலைவராக பதவியேற்ற பின் கலைஞரை சந்திக்க விரும்பினார். அப்போது குமரி ஆனந்தனின் மகள் என் மகள் போன்றவர் எனக் கூறி ஆசி வழங்கினார். அதனால் கலைஞரின் மகளான தமிழிசைக்கு எனது வாழ்த்துகள். அவர் தூத்துக்குடி தொகுதிக்கு புதியவர். அவருக்கு இன்னமும் இந்த ஊரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.