பாமகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தில் உளறிக் கொட்டிய நடிகர்!

ஏப்ரல் 04, 2019 379

திண்டுக்கல் (04 ஏப் 2019): மோடியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று உளறிக் கொட்டி பாமகவின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.

வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணி சார்பாக நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க.வினரிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது.

அதுமட்டும் அல்லாமல் ஏதேதோ பேசி பாமகவினரை ஏமாற்றத்திற்கு ஆளாக்கினா. ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...