அத்தியூத்து சுரண்டை சங்கரன்கோவில் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும்: திமுக!

ஏப்ரல் 05, 2019 346

சுரண்டை (04 ஏப் 2019): அத்தியூத்து சுரண்டை சங்கரன்கோவில் வழி ராஜபாளையம் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும் என்று நெல்லை திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்துள்ளார்.

சுரண்டை அருகில் உள்ள கழுநீர்குளம் ஊராட்சி பகுதியில் நெல்லை தொகுதி பாராளுமன்ற தி.மு.க.வேட்பாளர் ஞானதிரவியம். கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு கழுநீர்குளம், அத்தியூத்து, கல்லூத்து, தாமரைநகர், காமராஜர் நகர், அருந்ததியர் தெரு பகுதியில் வாக்கு சேகரித்து வாக்கு சேகரித்தார்‌. அப்போது பேசிய அவர் சாலை வசதிகளை மேம்படுத்த அத்தியூத்து முதல் சுரண்டை, சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம் செல்லும் ரோட்டை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவேன், பீடி தொழிலாளர் நலனுக்காக பார்லிமென்டில் குரல்கொடுப்பேன், திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க முழு முயற்சி எடுப்பேன் இடைத்தேர்தல் முடிவில் தமிழகத்தின் முதல்வராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு சாக்கடை பிரச்சினை முதல் அணைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும். பீடி தொழிலாளிகள் வளம் பெற குரல் கொடுப்பேன் என வாக்குறுதியளித்தார்.

வேட்பாளருடன் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கழுநீர்குளம் ஊராட்சி செயலாளர் கைமுருகன், காங்கிரஸ் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கரத்தினம் ஒன்றிய இளைஞர் அணி கோமு, சிவன்பாண்டியன், மல்லிகா, சுரேஷ் கண்ணா, தாமரை செல்வன், கார்த்திகேயன், இஸ்மாயில், திருமலைக்குமார், மருதுபாண்டியன், நவநீத கிருஷ்ணன், முருகன், மகேஸ்வரன், ராமர்களஞ்சியம், தங்கப்பா, நயினார் மற்றும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...