வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல் வீச்சு - இரண்டு திகவினர் காயம்!

ஏப்ரல் 05, 2019 359

திருச்சி (05 ஏப் 2019): திக தலைவர் கி. வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல் செருப்பு உள்ளிட்டவைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நேற்று திருச்சியில் கீரக்கொள்ளை பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க வந்திருந்தார். பெரம்பலூர் கூட்டத்தை முடித்து விட்டு 8.35க்கு திருச்சி பொதுகூட்டத்திற்கு வந்தார்.

ஆசிரியர் வீரமணி வருவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அவமான படுத்தி பேசியதாக கூறி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே காந்திமார்கெட் போலிசார் செருப்பு வீசியது யார் என தேட துவங்கினார்கள்.

அதற்குள்ளாக ஆசிரியர் மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார். அதன் பிறகு எந்த சலசலப்பு இல்லை, அவர் பேசி முடித்து கீழே இறங்கிய போது எங்கிருந்த கற்கள் மேடையை நோக்கி பாய்ந்தது. அப்போது மேடையில் இருந்தா காட்டுரை சேர்ந்த தி.க. தோழர் மீது அடிப்பட்டது. ஆசிரியர் வீரமணி அவர்களுடன் இருக்கும் குணசேகரன் அவருக்கு கண்ணில் கல் அடிப்பட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது.

இதற்கு இடையே ஆசிரியர் வீரமணி காரின் முன்பு இந்து முன்னியை சேர்ந்தவர்கள் சிலர் மறிக்க ஆரம்பித்தனர். உடனே அங்கிருந்த போலிஸ் அவர் உடனே அவர்களை கைது செய்து காந்திமார்கெட் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் இந்துமுன்னணியை சேர்ந்த மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை முதற்கட்டமாக கைது செய்து இருக்கிறது. மேலும் திகவினர் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...