தமிழகத்தில் திமுக கூட்டணி 33 இடங்களை கைபற்றும் - கருத்துக் கணிப்பு வெளியீடு!

ஏப்ரல் 05, 2019 482

சென்னை (5 ஏப் 2019): தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களை கைபற்றும் என்று பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்கள் கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன. அந்த வகையில், பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...