ராமநாதபுரம் தொகுதியில் பாஜக பிரச்சாரத்தின் போது பாட்டில் வீசியதாக இருவர் கைது!

ஏப்ரல் 06, 2019 293

ராமநாதபுரம் (05 ஏப் 2019): ராமநாதபுரம் தொகுதி பெரியபட்டிணத்தில் பாஜகவினர் வாக்கு சேகரித்தபோது அவர்கள் மீது பாட்டில் வீசியதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியபட்டிணத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் திடீரென பாட்டில் வந்து விழுந்தது. இதில் வேட்பாளர் நயினார்நாகேந்திரன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

அவர்களுக்கு அருகில் இருந்த திருப்புல்லாணி ஒன்றியம் அ.தி.மு.க. அவைத் தலைவர் உடையத்தேவர் என்பவர் மீது பாட்டில் விழுந்து மண்டை உடைந்தது. அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலையிட்டு கட்சியினரை அமைதிப்படுத்தினார். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பத்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபட்டிணம் ரிபாஸ் கான் (வயது22) மற்றும் முஹமது பாதுஷா (வயது33) ஆகிய இருவரையும் கைது செய்தனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...