முதியவருடன் கள்ளக் காதல் :இளம் பெண் கொலை - முதியவர் தற்கொலை!

ஏப்ரல் 06, 2019 622

சேலம் (06 ஏப் 2019): இளம் பெண்ணுக்கும் முதியவருக்கும் இடையே  ஏற்பட்ட கள்ளக் காதல் இறுதியில் கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் ஷகிரா (பெயர் மாற்றம், 25) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை செர்ந்த இனாமுல்லா (55) என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. ஷாகிரா ஏற்கனவே கணவரை பிரிந்தவர்.

இவர்களின் கள்ளக் காதல் இரு குடும்பத்தினரிடையே புயலை கிளப்பியது. இந்த நிலையில், நேற்று காலை ஷகிராவை சந்திக்க, இனாமுல்லா ஷாகிரா பணிபுர்நித ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த இனாமுல்லா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷகிராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு உடனடியாக அதே கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இனாமுல்லா எழுதிய 10 பக்க கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். அந்தக் கடிதத்தில், ``எனக்கும் ஷகிராவுக்கும் இருந்த பாவமான உறவினால் கொலை செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...