மோடி ராகுல் தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம்!

ஏப்ரல் 07, 2019 327

சென்னை (07 ஏப் 2019): தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் வரும் 12ம் தேதி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில், ராகுல்காந்தி பேச உள்ளார். தேனி நகர் பைபாஸ் ரோட்டில் புது பஸ் நிலையம் செல்லும் சாலையில், கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்த நாள்களில் வருகை தர உள்ளது கூட்டணியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...