எஸ்டிபிஐ கட்சியினர் திமுகவில் இணைந்தது உண்மையா? - எஸ்டிபிஐ விளக்கம்!

ஏப்ரல் 07, 2019 508

சென்னை (07 ஏப் 2019): எஸ்டிபிஐ கட்சியிலிருந்து விலகி சிலர் திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்று எஸ்டிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமுமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்டிபிஐ மத்திய சென்னையில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அமுமுகவுடன் எஸ்டிபிஐ கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் திமுகவில் இணைந்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், இதற்கு குறிப்பிட்ட ஊடகம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் எஸ் செய்யது அகமது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...