நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

ஏப்ரல் 08, 2019 553

நிலக்கோட்டை (08 ஏப் 2049): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வரும் 18-ஆம் தேதி தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அழகம்பட்டியில் பிரச்சாரம் செய்த போது மன்சூர் அலிகானுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

உடனே கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...