ஓட்டுக்கு பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஏப்ரல் 09, 2019 271

தேனி (09 ஏப் 2019): ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்! தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனி தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் ரூ.500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது தான்.

இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள்.

பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...