மாட்டுக்கறி விற்பனை செய்த முதியவர் மீது கொடூர தாக்குதல் - வீடியோ!

ஏப்ரல் 09, 2019 570

பிஸ்வானத் (09 ஏப் 2019): அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்த முதியவர் மீது பசு பயங்கரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது.

அஸ்ஸாம் பிஸ்வானத் பகுதியில் மாட்டுக்கறி விற்பனை செய்த 68 வயது முதியவர் சவ்கத் அலி என்பவரை பசு பயங்கரவாத கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியதோடு, அவரை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு வற்புறுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பாஜக ஆட்சியில் மாட்டுக்கறிக்காக படுகொலைகளும் தாக்குதல்களும் குறிப்பாக முஸ்லிம்களையும் தலித்துகளையும் நோக்கி நடத்தப்படுவது அதிகரித்தவண்ணமே உள்ளன. இது தொடருமேயானால் மேலும் என்னென்னவெல்லாம் அரங்கேறுமோ என்ற கவலையும் பொது மக்களை தொற்றியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...