விரைவில் விஜய்காந்த் பிரச்சாரம்?

ஏப்ரல் 09, 2019 196

சென்னை (09 ஏப் 2019): விரைவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தது. நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே கூட்டணி முடிவானது. 4 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

கூட்டணி இறுதியானவுடன் பிரேமலதா அளித்த பேட்டியில், விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கூறி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் அவர் இதே கருத்தை கூறி இருந்தார். இருப்பினும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு செல்வதற்கான எந்த அறிகுறிகளும் தேர்தல் களத்தில் காணப்படவில்லை.

இந்த நிலையில் விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் விஜயகாந்த் அளித்துள்ள முதல் பேட்டி இதுவாகும்.

அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி இதுவென்று கூறியுள்ளார். மேலும் உடல் நிலை சரியாக உள்ளது, விரைவில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...