பாஜகவுக்கு ரஜினி ஆதரவு!

ஏப்ரல் 09, 2019 419

சென்னை (09 ஏப் 2019): பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எனது அரசியல் நிலைப்பாட்டை முன்பே தெரிவித்துவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. கமலுக்கு ஆதரவா என்று கேள்வி கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்.

நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும். நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ’பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாய்பாயிடம் தெரிவித்தேன். பாஜக கூட்டணி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...