கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை!

ஏப்ரல் 11, 2019 310

சேலம் (11 ஏப் 2019): கடன் தொல்லையால் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சேலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்வம் என்ற தனியார் தங்கும் விடுதியில், நேற்று மாலை சென்னை சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் என்ற முதியவர் மனைவி மற்றும் இரு மகள்களுடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

காலை நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து யாரும் வெளியே வராத காரணத்தால், தாழிடப்படாமல் இருந்த கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது முதியவர் விஜயகுமார், அவரது மனைவி அனுராதா, 2வது மகள் ஆஷிகா ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து சடலமாக கிடந்துள்ளனர்.

மூத்த மகள் ஆர்த்தி மட்டும் மயக்க நிலையில் கிடந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த அழகாபுரம் போலீசார் உயிருக்கு போராடியப் படி இருந்த ஆர்த்தி மற்றும் மூன்று சடலங்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்போது ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சேலம் மாநகர துணை ஆணையர் தங்கதுரை விடுதியில் ஆய்வு செய்தார். அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதம் மூலம் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...