ராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

ஏப்ரல் 12, 2019 591

ராமநாதபுரம் (12 ஏப் 2019): ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு முஸ்லிம் பெண்களும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த இஸ்லாமிய பெண்ணையும் அவரது சகோதரரான திருப்பாலைக்குடி தேர்தல் பொறுப்பாளர் பாய்ஸ்(எ) முகமது காசின் என்பவரையும் அதே பகுதியை சேர்ந்த முகமது யூசுப் என்பவர் சிலருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் பலத்த வெட்டுபட்ட காசின் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகியை தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...