வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்!

ஏப்ரல் 12, 2019 510

சென்னை (12 ஏப் 2019): சென்னை மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கும், தினகரனுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்டிபிஐ வேட்பாளர் தெஹ்லான் பாக்கவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அண்ணாநகர் மஞ்சகொல்லை பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் எஸ்டிபிஐ சார்பில் வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது அப்பகுதி திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில பெண்கள் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...