நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஏப்ரல் 13, 2019 320

சென்னை (13 ஏப் 2019): திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக.

தமிழக காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று திமுக வெளியிட்டுள்ளது.

அதன்படி திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியல்...

சூலூர் - நா.பழனிசாமி
அரவங்குறிச்சி - செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம் - சரவணன்
ஒட்டப்பிடாரம் - எம்.சி.சண்முகையா.,
வரும் மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...