எங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு?-அனிதாவின் அண்ணன் கமலுக்கு பதில்!

ஏப்ரல் 13, 2019 379

சென்னை (13 ஏப் 2019): எங்கள் குடும்பத்தின் வாக்கு திமுக கூட்டணிக்கே என்று அனிதாவின் அண்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணனுக்கு யாருக்கு வாக்களிக்க விருப்பம் என்று கமல் ஹாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் கமலின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அனிதாவின் அண்ணன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "நான் ஒரு ரசிகனாக கமல்ஹாசனை பிடிக்கும் ஆனால் தற்போதைய சூழலில் சமூக நீதிக்க்காக போராடும் ஒரே அணி திமுக கூட்டணிதான். எனவே எங்கள் குடும்பத்தின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே" என்று கமல்ஹாசனுக்கு பதில் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...