வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு!

ஏப்ரல் 14, 2019 170

விழுப்புரம் (14 ஏப் 2019): விழுப்புரம் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த விசிக பிரமுகர் மீது கல் வீசி தக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக கட்சியின் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதில் உள்ள கோலியனூர் பகுதியில் நேற்று இக்கட்சி யின் வேட்பாளரான ரவிக்குமார் வாக்குச் சேகரிக்கச் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து கல்வீசப்பட்டதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

மேலும் வேட்பாளருடன் சென்றவருக்கு கயல்வேந்தன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் காயம் அடைந்தவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கல்வீச்சுக்குக் காரணமான 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...