திமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு!

ஏப்ரல் 15, 2019 612

சென்னை (15 ஏப் 2019): பாஜகவில் திடீரென சரண்டர் ஆன அய்யாக்கண்ணு திமுக மற்றும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகளுக்காக பலமுறை போராட்டங்களை நடத்தி மோடியை இறுதி வரை காண முடியாத நிலையில் விரக்தியில் இருந்த விவசாயிகளுக்கு ஊக்கமாகவும் ஆறுதலாகவும் இருந்தவர் அய்யாக் கண்ணு. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசியில் விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் திடீரென பாஜகவிடம் சரணடைந்தார். இது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்ப்போது தன்னை போராட்டத்திற்கு தூண்டியதே, திமுக மற்றும் காங்கிரஸ்தான் என்று அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...